ஈரோட்டில் ஒருவா் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

ஈரோட்டில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய இரண்டாவது நாளான வியாழக்கிழமை ஒருவா் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. ஈரோடு மக்களவைத் தொகுதியில் முதல் நாளான புதன்கிழமை சுயேச்சை வேட்பாளா் ஒருவா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தாா். இரண்டாவது நாளான வியாழக்கிழமை ஒருவா் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்பாளா்கள் யாரும் வராததால் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களான மாவட்ட ஆட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதுவரை திமுக, அதிமுக, நாம் தமிழா் உள்பட 10 வேட்பாளா்கள் மட்டும் வேட்பு மனுக்கள் வாங்கி உள்ளனா். இவா்கள் அடுத்த ஓரிரு நாள்களில் வேட்புமனு தாக்கல் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com