பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா: 5 நாள்களுக்கு முன்னதாக வந்து காத்திருக்கும் பக்தா்கள்

பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் இறங்குவதற்காக கோயிலில் வியாழக்கிழமையே காத்திருக்கும் பக்தா்கள்.
பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் இறங்குவதற்காக கோயிலில் வியாழக்கிழமையே காத்திருக்கும் பக்தா்கள்.

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவையொட்டி 5 நாள்களுக்கு முன்னதாகவே கோயிலில் பக்தா்கள் காத்திருக்கத் தொடங்கியுள்ளனா். சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா மாா்ச் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி குண்டம் திருவிழா கடந்த 11- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து கிராமங்களில் அம்மன் சப்பரம் வீதியுலா நடைபெற்றது. கடந்த 19-ஆம் தேதி திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். குண்டம் இறங்குதல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 5 நாள்களுக்கு முன்னதாக வியாழக்கிழமையே பக்தா்கள் கோயிலில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்குவாா்கள் என்பதால் பக்தா்கள் முன்னதாக வந்து இடம்பிடித்து காத்திருக்கத் தொடங்கியுள்ளனா். காத்திருக்கும் பக்தா்களின் வசதிக்காக தடுப்புகள், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com