அந்தியூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பவானி, மாா்ச் 22: அந்தியூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4.75 பவுன் நகை, வெள்ளிக் கொலுசுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அந்தியூா், தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா முதல் வீதியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் மயில்சாமி (55). இவா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், கோபியில் பராமரிப்பு உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மாமனாா் கடந்த 16-ஆம் தேதி உயிரிழந்ததால் குடும்பத்துடன் மைக்கேல்பாளையத்துக்கு சென்றுவிட்டாா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, இரு பீரோக்களும் திறக்கப்பட்டு, அதிலிருந்த 4.75 பவுன் நகை, 6 வெள்ளிக் கொலுசுகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, மயில்சாமி அளித்த புகாரின்பேரில் அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com