சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சென்னிமலை முருகப்பெருமான்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சென்னிமலை முருகப்பெருமான்.

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. முன்னதாக, காலை 6 மணியளவில் சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, ராஜ வீதிகள், பாா்க் சாலை, மலையடிவாரம் வழியாக சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, காலை 11 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) மாலை 6 மணியளவில் கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, 25 -ஆம் தேதி அதிகாலை மகா அபிஷேகம், காலை 6 மணியளவில் பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறும். 26 -ஆம் தேதி பரிவேட்டை, இரவு தெப்போற்சவம், 27- ஆம் தேதி காலை 8 மணியளவில் மகா தரிசனம், இரவு மஞ்சள் நீா் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com