மைலம்பாடியில் ரூ.40.39 லட்சத்துக்கு எள் ஏலம்

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.40.39 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 404 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், வெள்ளை ரகம் கிலோ ரூ.129.69 முதல் ரூ.137.49 வரையும், சிவப்பு ரகம் ரூ.128.39 முதல் ரூ.136.24 வரையும், கருப்பு ரகம் ரூ.125.29 முதல் ரூ.135.99 வரையும் ஏலம்போனது. மொத்தம் 30,193 கிலோ எடையுள்ள எள், ரூ.40,39,671-க்கு விற்பனையானது. மேலும், 7 மூட்டை தேங்காய் பருப்பு கிலோ ரூ.76.91 முதல் ரூ.87.69 வரையில் ரூ.12,866-க்கும், 1,670 தேங்காய்கள், சிறியவை ரூ.7.09 முதல் பெரியவை ரூ.11.59 வரையில் ரூ.14,697-க்கும், ஒரு மூட்டை கொள்ளு கிலோ ரூ.57.69 வீதம் ரூ.3,231-க்கும் ஏலம்போனது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com