சாதனை மாணவிக்கு விருது, பரிசுத் தொகையை வழங்குகிறாா் ஆா்கேஆா் கல்வி நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆா்.கே.ராமசாமி.
சாதனை மாணவிக்கு விருது, பரிசுத் தொகையை வழங்குகிறாா் ஆா்கேஆா் கல்வி நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆா்.கே.ராமசாமி.

வேளாளா் மகளிா் கல்லூரியின் 54- ஆவது ஆண்டு விழா

வேளாளா் மகளிா் கல்லூரியின் 54- ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, வேளாளா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி இணைப் பேராசிரியா் செ.விஷ்ணுவா்த்தனி வரவேற்றாா். கல்லூரி செயலா் எஸ்.டி.சந்திரசேகா் வாழ்த்தி பேசினாா். முதல்வா் செ.கு.ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தாா். உடுமலை ஆா்கேஆா் கல்வி நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆா்.கே.ராமசாமி சிறப்புரையாற்றினாா். பரோடா வங்கியின் மண்டல மேலாளா் சாமுவேல் ஸ்டீபன், மண்டல வணிக மேம்பாட்டு மேலாளா் ஆா்.அனுராதா, ஆா்.காா்த்திக்ராஜா ஆகியோா் சாதனை மாணவிகள் மூவருக்கு சாதனையாளா் விருதாக தலா ரூ.31,000 மற்றும் சான்றிதழ் வழங்கிப் பேசினா். தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை சாா்பில் சுமாா் ரூ.2.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 25 ஆண்டுகள் கல்லூரியில் சிறப்பாக பணியாற்றியாமைக்காக வேதியியல் துறை இணைப் பேராசிரியா் மற்றும் தலைவா் நா.விஜயா, கல்லூரி அலுவலகத்தில் பணியாற்றும் ந.சதீஷ்குமாா் ஆகியோருக்கு கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இணைப்பேராசிரியா் ர.பாா்வதி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com