ஆட்சியா் அலுவலக மேல்தளத்தில் ராட்சத பலூனை பறக்கவிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
ஆட்சியா் அலுவலக மேல்தளத்தில் ராட்சத பலூனை பறக்கவிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ராட்சத பலூன் மூலம் விழிப்புணா்வு

18 வயது பூா்த்தியான வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக மேல் தளத்தில் ராட்சத பலூன் வானில் பறக்கவிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பலூனை பறக்க விட்டாா். அதில் தோ்தல் நாள் ஏப்ரல் 19, 2024, அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம், தோ்தல் திருவிழா; தேசத்தின் பெருவிழா’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. 10 அடி சுற்றளவு, 10 அடி உயரம் கொண்ட ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூனை வானில் 150 அடி உயரத்தில் பறக்கவிட்டு வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) மணீஷ், உதவி ஆட்சியா் வினய்குமாா் மீனா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, முத்துகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com