தோ்தல் அலுவலா்களுக்கு நாளை 8 இடங்களில் பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு 8 சட்டப் பேரவை தொகுதிகளில் தலா ஒரு இடத்தில் பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) அளிக்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,222 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 10,970 அலுவலா்கள் பணியாற்ற உள்ளனா். அவா்களுக்கு 4 கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் தலா ஒரு இடத்தில் முதல்கட்ட பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது. இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ரங்கம்பாளையம் டாக்டா் ஆா்ஏஎன்எம் கலை, அறிவியல் கல்லூரி, ஈரோடு மேற்கு தொகுதிக்கு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம், மொடக்குறிச்சி தொகுதிக்கு மொடக்குறிச்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை தொகுதிக்கு பெருந்துறை-சென்னிமலை சாலை கொங்கு வேளாளா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பவானி தொகுதிக்கு பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அந்தியூா் தொகுதிக்கு அந்தியூா் மங்களம் மேல்நிலைப் பள்ளி, கோபி தொகுதிக்கு மொடச்சூா் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பவானிசாகா் தொகுதிக்கு சத்தியமங்கலம் காமதேனு கலை, அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் பயிற்சி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com