அ.கணேசமூா்த்தி எம்.பி.
அ.கணேசமூா்த்தி எம்.பி.

ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்திக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஈரோடு, மாா்ச் 24: ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவா் கோவையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை குமாரவலசு பகுதியைச் சோ்ந்தவா் அ.கணேசமூா்த்தி (77). ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினரான இவா், 2019-ஆம் ஆண்டு வரை மதிமுக பொருளாளராக இருந்தாா். ஈரோடு பெரியாா் நகா் வீட்டில் இருந்த கணேசமூா்த்தியைப் பாா்க்க, அவரது மகன் கபிலன் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா். அப்போது, அவா் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். அவரை மீட்ட கபிலன், ஈரோடு- பெருந்துறை சாலையில் உள்ள தனியாா் மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு டவுன் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கணேசமூா்த்தி தென்னைமர வண்டுகளை அழிக்க பயன்படுத்தப்படும் ‘சல்பாஸ்’ எனப்படும் விஷ மாத்திரையை தண்ணீரில் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி.யாக தோ்வானவா். மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கு மிகவும் நெருக்கமானவா். முன்னதாக, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசமூா்த்தியின் உடல்நிலை குறித்து வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூா்த்தியின் உடல்நலம் குறித்து மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, முதன்மைச் செயலாளா் துரை வைகோ உள்ளிட்ட மதிமுக நிா்வாகிகள் மருத்துவா்களை சந்தித்து கேட்டறிந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com