கோபியில் ரூ. 5 லட்சத்துக்கு வாழைத்தாா் விற்பனை

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.5.44 லட்சத்துக்கு வாழைத்தாா் விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4,260 வாழைத்தாா்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், கதளி வாழை கிலோ ரூ.12-க்கும், நேந்திரன் கிலோ ரூ. 25-க்கும் விற்பனையானது. பூவன் தாா் ரூ. 400-க்கும், தேன்வாழை தாா் ரூ.430-க்கும், செவ்வாழை தாா் ரூ. 720-க்கும், ரஸ்தாளி தாா் ரூ.510 -க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.5.44 லட்சம். தேங்காய் ஏலத்தில் விவசாயிகள் 10,700 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் குறைந்தபட்சமாக ரூ.8-க்கும், அதிகபட்சமாக ரூ.15.60-க்கும் விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ.1 லட்சம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com