அந்தியூரில் ரூ.5.77 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.77 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.77 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள் 5,885 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் கிலோ ரூ.17.59 முதல் ரூ.27.19 வரையில் ரூ.54,279-க்கும், 54 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.85.26 முதல் ரூ.91 வரையில் ரூ.1,71,292-க்கும், 32 மூட்டை எள் கிலோ ரூ.124.89 முதல் ரூ.134.19 வரையில் ரூ.2,59,830-க்கும், 2 மூட்டை ஆமணக்கு ரூ.59.69 முதல் ரூ.65.89 வரையில் ரூ.2,973-க்கும் ஏலம்போனது. 10 மூட்டை துவரை விற்பனைக்கு வந்த நிலையில், கிலோ ரூ.82.15 முதல் ரூ.99.99 வரையில் ரூ.38,335-க்கும், 9 மூட்டை கொள்ளு கிலோ ரூ.60.75 முதல் ரூ.61.75 வரையில் ரூ.35,010-க்கும், ஒரு மூட்டை நரிப்பயறு கிலோ ரூ.96.01 வீதம் ரூ.10,369-க்கும், ஒரு மூட்டை உளுந்து கிலோ ரூ.65.69 முதல் ரூ.80.75 வரையில் ரூ.2,503-க்கும், ஒரு மூட்டை தட்டைப் பயறு கிலோ ரூ.51.26 வீதம் ரூ.3,255-க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.5,77,846 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com