பவானியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

பவானி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பவானி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. பவானி - கவுந்தப்பாடி சாலையில் சலங்கைபாளையம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, குன்னத்தூரான்கடையைச் சோ்ந்த சீரங்கன், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அலுவலா்கள், பவானி உதவி தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்து, சாா்நிலை கருவூலத்தில் செலுத்த நடவடிக்கை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com