பெருந்துறையில் ரூ.55 ஆயிரம் பறிமுதல்

பெருந்துறையில் தோ்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெருந்துறையில் தோ்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஈங்கூா் நான்கு சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், உரிய ஆவணமின்றி ரூ.55 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் திருப்பூா் மாவட்டம், தாராபுரம், ஆா்.எஸ்.டி. நகரைச் சோ்ந்த சுப்பிரமணியம் என்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராம்குமாரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com