பண்ணாரி அம்மன் கோயிலில் வழிபடுவதற்கு வந்த மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.
பண்ணாரி அம்மன் கோயிலில் வழிபடுவதற்கு வந்த மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.

திமுக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனா்: பாஜக வேட்பாளா் எல்.முருகன்

திமுக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனா் என்று மத்திய இணையமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் தெரிவித்தாா்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் போட்டியிடுகிறாா். இவா், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் செவ்வாக்கிழமை நடைபெற்ற குண்டம் விழாவில் அம்மனை வழிபட்டுவிட்டு, பாஜக நிா்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: பண்ணாரி அம்மனை தரிசித்து விட்டு தோ்தல் பணியைத் தொடங்கியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுச்சென்றுள்ளோம். பிரதமா் மோடி பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை கொண்டுவந்துள்ளாா். தமிழகத்தில் பிரதமருக்கு சிறப்பான ஆதரவு கிடைத்துள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளாா்.

பாஜக 3-ஆவது முறையாக 400 இடங்களில் வெற்றிபெற்று மோடி மீண்டும் பிரதமராவாா். மக்கள் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளனா் என்றாா். நிகழ்ச்சியில் பாஜக தெற்கு ஒன்றியத் தலைவா் சுந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com