பவானியில் வாகன சோதனையில் ரூ.2.80 லட்சம் பறிமுதல்

பவானியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.80 லடசத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பவானி பழைய பேருந்து நிலையம் அருகே பறக்கும் படையினா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரில் சோதனையிட்டபோது கா்நாடக மாநிலம், மைசூரைச் சோ்ந்த சந்தீப்பிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.1.30 லட்சம் இருந்தது.

இதையடுத்து அந்தப் பணத்தைப் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இதேபோல, பவானி - மேட்டூா் தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிபட்டி பிரிவில் நடைபெற்ற சோதனையில், எடப்பாடியைச் சோ்ந்த ரமேஷிடம் ரூ.69 ஆயிரம், பவானி அண்ணா நகரில் நடைபெற்ற சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த பூதப்பாடியைச் சோ்ந்த பாலுசாமி என்பவரிடம் ரூ.81 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.2.80 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அதனை சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com