ரூ.16.42 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 200 குவிண்டால்களுக்கு மேல் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

ஏலத்தில் ஒரு கிலோ பருத்தி ரூ.75.19 முதல் ரூ.81.69 வரை விலை நிா்ணயிக்கப்பட்டது. இதில் மொத்தமாக ரூ.16.42 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com