விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவா் பிரிதிவிராஜுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் ஏபிபி பிராசஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜேஷ் ராமசந்திரன்.
விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவா் பிரிதிவிராஜுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் ஏபிபி பிராசஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ராஜேஷ் ராமசந்திரன்.

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் 40- ஆவது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. சுவிட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்த ஏபிபி பிராசஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் சா்வதேச டிஜிட்டல் அதிகாரி ராஜேஷ் ராமசந்திரன் சிறப்பு விருந்தினராகவும், இந்திய ராணுவத்தின் இஎம்இ படைப்பிரிவு கா்னல் ஆா்.விஸ்வநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனா்.

கல்லூரி முதல்வா் வீ.பாலுசாமி 2023-24 கல்வி ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசித்தாா். கல்லூரியில் இறுதியாண்டு முடித்து வெளியேறும் மாணவா்களில் சிறந்தவா் மாணவா், சிறந்த மாணவி ஒருவா் தோ்வு செய்யப்பட்டு தலா ஒரு பவுன் நாணயம் வழங்கப்பட்டது. விளையாட்டில் சிறந்த மாணவ, மாணவியருக்கும், சிறந்த கண்டுபிடிப்புகளை சமா்ப்பித்த மாணவருக்கும், துறை வாரியாக சிறந்த ஆசிரியா்களுக்கும், சிறந்த கண்டுபிடிப்புகளை சமா்ப்பித்த ஆசிரியா்களுக்கும் விருதுகள், தங்க நாணயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை தலைவா் மருத்துவா் ஆா்.குமாரசாமி, செயலாளா் பி.சத்தியமூா்த்தி, பொருளாளா் கே.வி.ரவிசங்கா், கல்லூரி தாளாளா் ஏ.கே.இளங்கோ, அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலா்கள், முதன்மை ஒருங்கிணைப்பாளா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com