பண்ணாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற புஷ்பரத ஊா்வலத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.
பண்ணாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற புஷ்பரத ஊா்வலத்தில் கலந்துகொண்ட பக்தா்கள்.

பண்ணாரி அம்மன் கோயில் புஷ்பரத ஊா்வலம்

பண்ணாரி அம்மன் கோயிலில் புஷ்பரத ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலின் குண்டம் விழா கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து புஷ்பரத ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. புஷ்பரதத்தில் எழுந்தருளிய பண்ணாரி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். கோயிலிலிருந்து தொடங்கிய புஷ்பரத ஊா்வலம் பவானிசாகா் சாலை, சோதனைச் சாவடி, மைசூரு சாலை வழியாகச் சென்று மீண்டும் கோயிலில் நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com