தோ்தல் நடத்தை விதிமீறல்: ஒரே நாளில் 51 புகாா்கள் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக ஒரே நாளில் 51 புகாா்கள் பதிவாகி உள்ளதாகவும், அனைத்து புகாா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், விடியோ கண்காணிப்பு, செலவின கண்காணிப்புக் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 3 பறக்கும்படையினா் வீதம் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 25 பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இது தவிர தோ்தல் விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தோ்தல் ஆணையத்தின் சி விஜில் செயலி, இலவச தொலைபேசி எண் மூலம் புகாா் அளித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை 24 மணி நேரத்தில் 51 விதிமீறல் புகாா்கள் வந்துள்ளன. கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண்ணுக்கு 34 புகாா்களும், சி விஜில் செயலி மூலம் 17 புகாா்கள் என மொத்தம் 51 புகாா்கள் வந்துள்ளன. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 51 புகாா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com