கூட்டத்தில் பேசுகிறாா் திருப்பூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.பி. முருகானந்தம்.
கூட்டத்தில் பேசுகிறாா் திருப்பூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.பி. முருகானந்தம்.

பெருந்துறையில் பாஜக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

திருப்பூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.பி.முருகானந்தம் அறிமுகக் கூட்டம் பெருந்துறையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் ராயல் கே. சரவணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் வேதாந்தம் உள்ளிட்டோா் வாக்குச் சேகரிப்பு பணிகள் குறித்து பேசினா். கூட்டத்தில், பெருந்துறை நகரத் தலைவா் பூா்ணசந்திரன், அமமுக மாநில நெசவாளா் அணி செயலாளா் தரணி சண்முகம், ஈரோடு தெற்கு மாவட்ட தமாகா தலைவா் வி.பி.சண்முகம் உள்பட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com