அவல்பூந்துறையில் ரூ. 63 ஆயிரத்துக்கு தேங்காய்கள் ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 63 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,214 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். தேங்காய் குறைந்தபட்ச விலையாக கிலோ 24.19-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.27.69-க்கும், சராசரி விலையாக 27.19-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2,302 கிலோ தேங்காய்கள் ரூ.63 ஆயிரத்து 26-க்கு விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com