சரக்கு வாகன ஓட்டுநரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

பவானி அருகே தோ்தல் பறக்கும் படையினரின் நடத்திய வாகன சோதனையில் சரக்கு வாகன ஓட்டுநரிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் பட்லூா் நான்குசாலை பிரிவில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த ஓட்டுநா் சுரேஷ் (44), ரூ.1.05 லட்சம் ரொக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், சத்தியமங்கலத்துக்கு புண்ணாக்கு வாங்கச் செல்வது தெரிந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பவானி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com