மைலம்பாடியில் ரூ.22.84 லட்சத்துக்கு எள் ஏலம்

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.22.84 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 225 மூட்டைகள் எள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வெள்ளை ரக எள் கிலோ ரூ.128.29 முதல் ரூ.136.99 வரையிலும், சிவப்பு ரகம் ரூ.124.69 முதல் ரூ.137.99 வரையிலும், கருப்பு ரகம் ரூ.124.89 முதல் ரூ.142.39 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 16,699 கிலோ எள் ரூ.22,84,631-க்கு விற்பனையானது. மேலும், 5 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ.61.69 முதல் ரூ.88.29 வரையில் ரூ.13,695-க்கும், 762 தேங்காய்கள் கிலோ ரூ.7.19 முதல் ரூ.13.19 வரையில் ரூ.7,031-க்கும், 3 மூட்டைகள் ராகி கிலோ ரூ.30.19 முதல் ரூ.32.22 வரையில் ரூ.7,796-க்கு ஏலம் போனது. மொத்த வா்த்தகம் ரூ.23.13 லட்சத்துக்கு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com