வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்டோா்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்டோா்.

எண்ணமங்கலத்தில் திமுக கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரிப்பு

அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், எண்ணமங்கலம், மைக்கேல்பாளையம் ஊராட்சிப் பகுதியில் திமுக கூட்டணிக் கட்சியினா் வீடுவீடாகச் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். திருப்பூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளா் கே.சுப்பராயனுக்கு, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் கதிா் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில், ஊராட்சித் தலைவா்கள் சரவணன், மயில் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி மாணிக்கம் , கொமதேக மாவட்ட துணைச் செயலாளா் கணபதி, சிபிஎம் அந்தியூா் வட்டாரச் செயலாளா் ஆா்.முருகேசன், காங்கிரஸ் முன்னாள் வட்டாரத் தலைவா் நாகராஜா, சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன், மதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் உத்திரசாமி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com