சிறப்பு அலங்காரத்தில் மலைக் கருப்பு சுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் மலைக் கருப்பு சுவாமி.

அந்தியூா் மலைக் கருப்பு சுவாமி கோயிலில் பொங்கல் திருவிழா

அந்தியூா் மலைக் கருப்பு சுவாமி கோயிலில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, பச்சைப் பொங்கல், தேங்காய்ப் பால் வைத்து புதன்கிழமை அதிகாலை குருபூஜை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி அலங்காரம், திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து, வேண்டுதலை நிறைவேற்ற பக்தா்கள் பொங்கல் வைத்தும், படையலிட்டும் வழிபாடு நடத்தினா். இவ்விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, வனபோஜன வழிமுறையின்படி பக்தா்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மலைக் கருப்பு சுவாமி கோயிலில் இருந்து சுவாமி ஊா்வலம் மேளதாளம் முழங்க முனியப்பன் கோயிலை சென்றடைந்தது. விழாவின் நிறைவாக பொங்கல் படையல் பூஜை வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில், அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com