தாளவாடியில் வீசிய பலத்த காற்றால் முறிந்து விழந்த வாழை மரங்கள்.
தாளவாடியில் வீசிய பலத்த காற்றால் முறிந்து விழந்த வாழை மரங்கள்.

தாளவாடி மலைப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் புதன்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டிவதைத்தது. இதற்கிடையே தாளவாடி அருகே உள்ள கல்மண்டிபுரம், எரகனஹள்ளி, இக்கலூா், சிக்கஹள்ளி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை புதன்கிழமை பெய்தது.

சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை நிலவியது. மழை பெய்ததால் மலைக் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இருப்பினும் கல்மண்டிபுரம், எரகனஹள்ளி பகுதிகளில் காற்றின் வேகம் தாங்காமல் விவசாயிகள் பயிரிட்ட 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனா்.

X
Dinamani
www.dinamani.com