அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கே.சுமதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கிறாா் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளா் பி.பேட்ரிக் ரெய்மாண்ட்.
அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கே.சுமதிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கிறாா் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளா் பி.பேட்ரிக் ரெய்மாண்ட்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

திமுக தோ்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாநில பொதுக் குழுக் கூட்டம் ஈரோடு மாவட்டம் கருந்தேவன்பாளையம் அல்அமீன் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் கே.தங்கவேலு தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலாளா் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவும், பணிமாறுதல் கலந்தாய்வை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து உயா்நிலைப் பள்ளிகளிலும் 7 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை உறுதிசெய்ய வேண்டும். ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். ஈட்டிய விடுப்பு, உயா்கல்விக்கு ஊக்க ஊதியம், பணிக்கொடை ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும்.

நேரடி நியமனத்தின்போது பட்டதாரி ஆசிரியா்களுக்கு 10 சதவீத அளவுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு வழங்க வேண்டும். தலைமை ஆசிரியா் பதவி உயா்வு பெற டெட் தகுதித் தோ்வு தேவை இல்லை என்பதை அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். முதுகலை ஆசிரியா்களை உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களாக நியமனம் செய்வதை கைவிட வேண்டும். 20 மாணவா்களுக்கு ஒரு ஆசிரியா் என்ற அடிப்படையில் ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியா்களுக்கு 100 சதவீதம் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது, பேரறிஞா் அன்பழகன் விருது, கனவு ஆசிரியா் விருது பெற்ற ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com