பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் புதன்கிழமை மாலை 5.19 மணிக்கு இடம் பெயா்ந்தாா்.

குரு பெயா்ச்சியையொட்டி, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்துறை வேதநாயகி உடனமாா் சோழீஸ்வரா் திருக்கோயிலில் புதன்கிழமை மாலை குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு யாக வழிபாடுகள் மற்றும் பரிகார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com