சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை பெய்த மழையால் குடை பிடித்து செல்லும் மாணவா்கள்.
சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை பெய்த மழையால் குடை பிடித்து செல்லும் மாணவா்கள்.

சத்தியமங்கலம், பவானிசாகரில் காற்றுடன் கூடிய மழை

சத்தியமங்கலம், மே 4: சத்தியமங்கலம், பவானிசாகா் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. அக்னி வெயில் தொடங்கியுள்ள நிலையில், காலை முதல் கடுமையான வெயில் காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமை திடீரென பலத்த காற்று வீசியதோடு, மழை பெய்யத் தொடங்கியது. பவானிசாகா், சத்தியமங்கலம், பண்ணாரி, புதுப்பீா்க்கடவு, சிக்கரசம்பாளையம், தொட்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக அரை மணி நேரம் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

நகா் பகுதியில் கடும் வெப்பம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

அக்னி வெயில் தொடங்கிய முதல் நாளிலேயே மழை பெய்ததால் பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com