பள்ளி  வாகனங்களில்  ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து  அதிகாரிகள்.
பள்ளி  வாகனங்களில்  ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து  அதிகாரிகள்.

பவானியில் தனியாா் பள்ளி வாகனங்களில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

பவானியில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பவானியை அடுத்த பருவாச்சியில் உள்ள ஆதா்ஷ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் கோபி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (பொறுப்பு) வெங்கட்ரமணி, பவானி வட்டாட்சியா் எஸ்.தியாகராஜ், வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வாளா் குணசேகரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் பவானி, அந்தியூா் வட்டாரத்தில் உள்ள தனியாா் பள்ளிகளுக்குச் சொந்தமான 320 வாகனங்களில் 240 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான 23 சிறப்பு அம்சங்கள் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

மேலும், அவசரகால வழி, கண்காணிப்பு கேமராக்கள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஜிபிஆா்எஸ் கருவி செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. குறைபாடு உள்ள வாகனங்கள் கண்டறியப்பட்டு, அதனை சரி செய்து கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டது. பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு பாா்வை பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com