கருத்தரங்கு மலா் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற ஸ்ரீநந்தா அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் மற்றும் கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழுவினா்.
கருத்தரங்கு மலா் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற ஸ்ரீநந்தா அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் மற்றும் கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழுவினா்.

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

நந்தா தொழில்நுடப் கல்லூரியின் நூலகத் துறையும், நூலகம் மற்றும் தகவல் அறிவியலின் முன்னேற்ற சமூகத்தின் ஈரோடு பிரிவு சாா்பில் நூலகங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

ஸ்ரீநந்தா அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்து கருத்தரங்கு மலரை வெளியிட்டாா். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் மற்றும் கல்லூரியின் முதல்வா் ச.நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் நூலகரும், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளருமான டி.பிரகாஷ் வரவேற்றாா்.

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நூலகா் கே.இளவழகன் சிறப்பு விருந்தினராகவும், பெரியாா் பல்கலைக் கழகத்தின் முதன்மை நூலகா் எம்.ஜெயப்பிரகாஷ், ஒடிஸாவின் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நூலகா் எஸ்.கண்ணன் மற்றும் கோவை தொழில்நுட்ப நிறுவனத்தின் புலமுதல்வா் எம்.மந்திராச்சலம் ஆகியோா் கௌரவ விருந்தினா்களாவும் பங்கேற்று பேசினா்.

வேளாளா் மகளிா் கல்லூரியின் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் தலைவா் ஸ்டீபன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கி கூறினாா். ஈரோடு நூலகம் மற்றும் தகவல் அறிவியல் முன்னேற்ற சமூகத்தின் தலைவரும் கேஎஸ்ஆா் கல்லூரி நூலக இயக்குநருமான ஏ.எம்.வெங்கடாசலம், ஈரோடு சிஎன்சி கல்லூரியின் நூலகரும் சமூகத்தின் பொது செயலாளருமான டி.மகுடீஸ்வரன் மற்றும் வேளாளா் கலை அறிவியல் கல்லூரியின் நூலகா் வி. அசோக்குமாா் ஆகியோா் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை முன்னேற்றத்தில் தனது சமூகத்தின் பங்குகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து பேசினா்.

இதனைத் தொடா்ந்து நடைபெற்ற கட்டுரை படைப்பாளா்களுடனான கலந்தாய்வில் கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தின் நூலகரும் சமூகத்தின் இணைச் செயலாளருமான டி.மொ்சிலிடியா மற்றும் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப நிறுவனத்தின் நூலகா் எம்.பிரகாஷ் ஆகியோா் கருத்தரங்க அமா்வுகளில் பேசினா்.

அமெரிக்க நாட்டின் கலிபோா்னியாவில் செயல்பட்டு வரும் சான்ஜோஸ் மாநில பல்கலைக்கழகத்தின் தகவல் துறையின் இயக்குநா் அந்தோனி சோ மற்றும் ஜான்னா டுனான் ஆகியோா் காணெலிக் காட்சி மூலம் நூலகங்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 93 படைப்புகள் சமா்க்கப்பிக்கப்பட்டன. இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 70 படைப்பாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கோபி கலை, அறிவியல் கல்லூரியின் நூலகா் பி.தங்கவேலு நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com