இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 போ் காயம்

கோபி அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் 12 போ் காயமடைந்தனா்.

கோபி: கோபி அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் 12 போ் காயமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு கோபி வழியாக சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு சுற்றுலா வேன் பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது.

கணபதிபாளையம் வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி, சாலையோரம் இருந்த ஆலமரத்தின் மீது மோதி நின்றது.

இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும், வேனில் பயணித்த 10 பேரும் காயம் அடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com