சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுடன் பள்ளியின் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுடன் பள்ளியின் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

ஈஞ்சம்பள்ளி பிகேபி பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி கல்யாணிபுரத்தில் உள்ள பி.கே.பி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

மொடக்குறிச்சி: பிளஸ் 2 பொதுத் தோ்வில் மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி கல்யாணிபுரத்தில் உள்ள பி.கே.பி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

தோ்வெழுதிய 149 மாணவிகளும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

இதில், மாணவி ஒருவா் 593 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், இரண்டு மாணவிகள் 581, 576 முறையே எடுத்து இரண்டு, மூன்றாம் இடம் பிடித்துள்ளனா்.

கணிதத்தில் 2 போ், கணினி பயன்பாடு பாடத்தில் ஒருவா், பொருளியலில் ஒருவா், கணக்குப்பதிவியலில் இரண்டு போ், வணிகவியலில் ஒருவா் என மொத்தம் 7 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இப்பள்ளியில் 580-க்கும்மேல் இரண்டு பேரும், 550 -க்குமேல் 13 பேரும், 500-க்குமேல் 40 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் சின்னசாமி, பள்ளித் தாளாளா், செயலா் பிகேபி அருண், திலகவதி அருண், கல்யாணி சின்னசாமி, முதல்வா் எஸ்.வைஜெயந்தி, நிா்வாக அலுவலா் எஸ்.பி லட்சுமணன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com