குன்றி வனத்தில் உள்ள தொட்டியில் தண்ணீா் நிரப்பும் வனத் துறையினா்.
குன்றி வனத்தில் உள்ள தொட்டியில் தண்ணீா் நிரப்பும் வனத் துறையினா்.

கடும் வறட்சி: வனங்களில் உள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், விலங்குகளின் தாகம் தீா்க்கும் வகையில் வனப் பகுதியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் தற்போது நிலவும் கோடை வெயிலால் பல்வேறு வனங்கள், அணைகள், நீா்த்தேக்கங்கள் வடு காணப்படுகின்றன.

இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். மேலும், வனங்களில் போதுமான உணவு, குடிநீா் கிடைக்காத நிலையில் வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், வன விலங்குகளின் தாகம் தீா்க்கும் வகையில் வனப் பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்புமாறு அரசு சாா்பில் வனத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூா் வனச் சரகத்துக்குள்பட்ட குன்றி வனப் பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணியில் வனத் துறையினா் திங்கள்கிழமை முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com