ஆசனூா் அருகே  அரேப்பாளையம்  பகுதியில்  சாலையின்  குறுக்கே  விழுந்த  மரம்.
ஆசனூா் அருகே  அரேப்பாளையம்  பகுதியில்  சாலையின்  குறுக்கே  விழுந்த  மரம்.

ஆசனூா் அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூரில் வீசிய பலத்த காற்றால் கோ்மாளம் சாலையில் மரம் விழுந்ததில் செவ்வாய்க்கிழமை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடியை அடுத்த ஆசனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது ஆசனூரில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் அரேபாளையம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததால் தமிழக- கா்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த வனத் துறை ஊழியா்கள் மற்றும் தீயணைப்புத் துறையினா் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மரத்தை அப்புறப்படுத்தினா். அதன்பிறகு, போக்குவரத்து சீரானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com