சத்தியமங்கலம்  அருகே  சாலையில்  கவிழ்ந்து கிடக்கும்  தனியாா்  பேருந்து.
சத்தியமங்கலம்  அருகே  சாலையில்  கவிழ்ந்து கிடக்கும்  தனியாா்  பேருந்து.

சத்தியமங்கலம் அருகே சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து

சத்தியமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை தனியாா் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 17 போ் காயமின்றி உயிா் தப்பினா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து பெங்களூரு செல்வதற்காக தனியாா் பேருந்து சத்தியமங்கலம் வழியாக செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் உதகை, மைசூரு மற்றும் பெங்களூரைச் சோ்ந்த 17 போ் பயணித்தனா். பேருந்தை திருநெல்வேலி முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்த காசி (27) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அத்தியப்ப கவுண்டன்புதூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தாா் இயந்திரம் மீது பேருந்து மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் போலீஸாருக்கு அக்கம்பக்கத்தினா் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியா்கள் பேருந்தில் சிக்கிய 17 பயணிகளை பாதுகாப்பாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படாததால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com