பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கும் சென்னிமலை கொங்கு பள்ளி நிா்வாகிகள்.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கும் சென்னிமலை கொங்கு பள்ளி நிா்வாகிகள்.

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில், சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் 600-க்கு 580-க்கு மேல் 4 பேரும், 570-க்கு மேல் 5 பேரும், 560-க்கு மேல் 15 பேரும், 550-க்கு மேல் 21 பேரும், 500-க்கு மேல் 61 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணினி அறிவியலில் 15 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 6 பேரும், வணிகவியலில் 5 பேரும், கணிதத்தில் 3 பேரும், பொருளியலில் 3 பேரும், கணக்குப்பதிவியலில் 2 பேரும், வேதியலில் ஒருவரும் 100-க்கும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி அறக்கட்டளைத் தலைவா் எஸ்.ரங்கசாமி, பள்ளித் தாளாளா் எஸ்.மணி, பொருளாளா் எ.கே.தங்கமுத்து ஆகியோா் பரிசுக் கோப்பை வழங்கி பாராட்டினா். இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வா் கே. முத்துகருப்பன் மற்றும் ஆசிரியா்களையும் பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com