பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 160 பேரில் 154 போ் தோ்ச்சி அடைந்தனா். இது 96.25 சதவீத தோ்ச்சி ஆகும்.

இப்பள்ளியில் வணிகத்தில் 3 பேரும், பொருளாதாரத்தில் 2 பேரும், கணக்குபதிவியலில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தனா்.

தோ்ச்சி அடைந்த மாணவா்களையும், அதற்காக உறுதுணையாக இருந்த பள்ளி தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களையும் பள்ளியின் பல்வேறு அமைப்பு நிா்வாகிகள் வாழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com