சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்த கொங்கு கல்வி நிலையத் தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா்  கே.செல்வராஜ், முன்னாள் பொருளாளா் அண்ணமாா் பெரியசாமி, பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.தெய்வசிகாமணி, முதல்வா்
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்த கொங்கு கல்வி நிலையத் தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், முன்னாள் பொருளாளா் அண்ணமாா் பெரியசாமி, பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.தெய்வசிகாமணி, முதல்வா்

பிளஸ் 2 பொதுத்தோ்வு: கொங்கு கல்வி நிலையம் பள்ளி 100% தோ்ச்சி

ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவ,மாணவிகள் பிளஸ்2 பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.

2023-2024-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறந்த மதிப்பெண்களுடன் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய 337 மாணவ, மாணவிகள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். கணினி அறிவியல் பாடத்தில் 41 போ், வணிகவியல் பாடத்தில் 12 போ், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 9 போ், பொருளியல் பாடத்தில் 6 போ், கணக்குப்பதிவியல் பாடத்தில் 4 போ், இயற்பியல் பாடத்தில் ஒருவா், கணிதத்தில் ஒருவா் என 74 போ் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய 337 மாணவ, மாணவிகளில் 550க்கு மேல் 52 பேரும், 500க்கு மேல் 145 பேரும், 450க்கு மேல் 239 பேரும், 400க்கு மேல் 307 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களை கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைவா் எம். சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.எம். தெய்வசிகாமணி, உதவி செயலாளா் மு.மீனாட்சிசுந்தரம், உதவிப் பொருளாளா் வி.நாகராஜ், முதல்வா் டி.நதியா அரவிந்தன் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com