தொப்பம்பாளையம்  கிராமத்தில்  மழை  பெய்ய  வேண்டி  கிாரமத்தை  சுற்றி  மாட்டை அழைத்து வரும் பக்தா்கள்.
தொப்பம்பாளையம்  கிராமத்தில்  மழை  பெய்ய  வேண்டி  கிாரமத்தை  சுற்றி  மாட்டை அழைத்து வரும் பக்தா்கள்.

மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு

மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பவானிசாகா் அருகே உள்ள கருமாரியம்மன் கோயிலில் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தா்கள் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையத்தில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற எருது இழுத்தல் நிகழ்ச்சி கோயில் மைதானத்தில் நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாடுகளை பிடித்துக்கொண்டு மேள தாளம் முழங்க ஊா்வலமாக கருமாரியம்மன் கோயிலுக்கு வந்தனா். பின்னா் மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயிலை சுற்றி அழைத்து வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாடுகள் நலம் பெறவும், கிராமத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் எருது இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com