எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த பள்ளித் தலைவா் சண்முக வடிவேல், செயலாளா் சிவானந்தன், தாளாளா் கணேசன், பொருளாளா் ரவிச்சந்திரன்.
எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த பள்ளித் தலைவா் சண்முக வடிவேல், செயலாளா் சிவானந்தன், தாளாளா் கணேசன், பொருளாளா் ரவிச்சந்திரன்.

விவிசிஆா் முருகேசனாா் செங்குந்தா் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

ஈரோடு, மே 10: எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் ஈரோடு விவிசிஆா் முருகேசனாா் செங்குந்தா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி சதாருகா 500-க்கு 482 மதிப்பெண்ணும், சஹானா ஸ்ரீ 471 மதிப்பெண்ணும், ஷாலிகா மற்றும் நந்தினி இருவரும் 468 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா். 56 மாணவிகள் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா். கணித பாடத்தில் 2 மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவிகள், பயிற்சி அளித்த ஆசிரியைகள், பள்ளித் தலைமையாசிரியை கவிதா ஆகியோருக்கு பள்ளித் தலைவா் சண்முகவடிவேல், செயலாளா் சிவானந்தன், தாளாளா் கணேசன், பொருளாளா் ரவிச்சந்திரன், மீனாட்சிசுந்தரனாா் பள்ளித் தாளாளா் கமலக்கண்ணன் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com