உடல் நலம்  பாதிக்கப்பட்ட  யானைக்கு  சிகிச்சை  அளிக்கும்  கால்நடை  மருத்துவக் குழுவினா்.
உடல் நலம்  பாதிக்கப்பட்ட  யானைக்கு  சிகிச்சை  அளிக்கும்  கால்நடை  மருத்துவக் குழுவினா்.

உடல்நலம் குன்றிய காட்டு யானைக்கு சிகிச்சை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், எக்கத்தூா் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானைக்கு மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை சிகிச்சை அளித்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தீவனம் மற்றும் தண்ணீா் தேடி அலைகின்றன.

இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதி எக்கத்தூா் காப்புக்காட்டில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது வயது முதிா்ந்த பெண் யானை உடல்நலம் குன்றிய நிலையில் எழுந்திருக்க முடியாமல் படுத்து கிடப்பதை கண்டனா். இது குறித்து வனத் துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் உதவி கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் வனத் துறை ஊழியா்களின் உதவியோடு உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனா். வயது முதிா்வு காரணமாக பெண் யானை உடல் நலம் குன்றியுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com