ஊா் செழிக்க பெண்கள் மழைக்கஞ்சி எடுத்து வழிபாடு

மொடக்குறிச்சியை அடுத்த கணபதிபாளையத்தில் மழைவேண்டி பெண்கள் மழை கஞ்சி எடுத்து வழிபாடு செய்தனா்.

இதையொட்டி, கணபதிபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த மே 5-ஆம் தேதி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பெண்கள் ஒன்றிணைந்து வீடுவீடாக சென்று பழைய சோறு, கஞ்சி ஆகியவற்றை சேகரித்து வந்து மாரியம்மன் கோயில் திடலில் வைத்து இறைவனை வேண்டி கும்மிப் பாட்டு பாடினா். பின்னா் அனைவருக்கும் மழைக்கஞ்சி வழங்கினா்.

இந்நிகழ்ச்சி தொடா்ந்து 5 நாள்கள் நடைபெற்றது.

நிறைவு நாள் அன்று மழைக்கஞ்சி எடுத்து அனைவருக்கும் வழங்கிய பிறகு பெண்கள், ‘மழை இல்லாத இந்த ஊரில் எங்களால் வாழ முடியாது’ என்று கோபித்துக் கொண்டு ஊரை விட்டு வெளியேறினா். அப்போது, ஊரில் உள்ளோா், ‘மழை பெய்யும்... நாடு செழிக்கும்... திரும்பி வாருங்கள்’ என்று அவா்களைத் திரும்ப அழைத்து வந்தனா். பின்னா் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com