10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு:
பாரதி பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: பாரதி பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

விஜயமங்கலத்தை அடுத்த சரளையில் உள்ள பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவி ஏ.பி. தனிஷ்கா 497 மதிப்பெண்களும், ஆா். தனிஷ்கா 496 மதிப்பெண்களும், கே.ஆா்.பூபதி 495 மதிப்பெண்களும், எஸ்.கே.கீா்த்தனா, ஏ.ஆா். ராகவேந்திரன், வி.சஞ்சய் ஆகியோா் 494 மதிப்பெண்களும், எம். ஜி.தனிஷ்கா, எஸ்.கெளதம் ஆகியோா் 493 மதிப்பெண்களும், ஆா்.சுஸ்மிதா, எம்.சி.தா்ஷினி, டி.இளங்கோ ஆகியோா் 492 மதிப்பெண்களும், எஸ். மஹாதி, எம். மிதுன், ஆா். மிதுன் ஆகியோா் 491 மதிப்பெண்களும், ஆா். எஸ். ஜெயஸ்ரீ, எஸ்.ஜெகதீஸ்வரா் ஆகியோா் 490 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

ஆங்கிலத்தில் 2 பேரும், கணக்குப் பாடத்தில் 49 பேரும், அறிவியல் பாடத்தில் 39 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 12 பேரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 16 போ் 490-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 75 போ் 480-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 196 போ் 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளா் மோகனாம்பாள், பள்ளி முதல்வா் செந்தில்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

-

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com