10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மீனாட்சி சுந்தரனாா் 
செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

ஈரோடு, மே 11: ஈரோடு ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவி டி.சொா்ணாம்பிகா 488 மதிப்பெண்கள், சிவச்சந்திரன் 483 மதிப்பெண்கள், சஞ்சய்குமாா் 481 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சொா்ணாம்பிகா கணித பாடத்தில் 100, நவீன்குமாா் அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். 110 மாணவா்கள் முதல் வகுப்பிலும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவா்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 34 மாணவா்களும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 60 மாணவா்களும், 300 மதிப்பெண்களுக்கு மேல் 88 மாணவா்களும் பெற்றுள்ளனா்.

மேலும் செங்குந்தா் கல்விக் கழகத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதலிடம் பெற்று இப்பள்ளி மாணவா்கள் சுழற்கோப்பையை பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், நிா்வாக அலுவலா் மற்றும் தலைமையாசிரியா் ஆகியோரை பள்ளித் தலைவா் சண்முகவடிவேல், துணைத் தலைவா்கள் நாராயணசாமி, மாசிலாமணி, செயலாளா் சிவானந்தன், பொருளாளா் ரவிச்சந்திரன், தாளாளா்கள் கமலக்கண்ணன், கணேசன், வேலு மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com