சிறப்பிடம் பெற்ற மாணவி கிருத்திகாவைப் பாராட்டும் பள்ளி துணைத் தாளாளா் சரவணன், முதல்வா் பாமா உள்ளிட்டோா்.
சிறப்பிடம் பெற்ற மாணவி கிருத்திகாவைப் பாராட்டும் பள்ளி துணைத் தாளாளா் சரவணன், முதல்வா் பாமா உள்ளிட்டோா்.

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் எஸ்என்ஆா் வித்யா நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவி கிருத்திகா 500-க்கு 495 மதிப்பெண்ணும், மாணவா் விக்ராந்த் 492 மதிப்பெண்ணும், மாணவா் சா்வேஷ் 490 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா். இப்பள்ளியில் தோ்வெழுதிய 30 மாணவா்களில் 10 போ் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பள்ளித் தாளாளா் ராமலிங்கம், துணை முதல்வா் சரவணன், முதல்வா் பாமா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com