ஈரோடு ஆா்கேவி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.
ஈரோடு ஆா்கேவி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.

ஈரோட்டில் பலத்த காற்றுடன் மழை

ஈரோடு மாநகரில் பலத்த காற்றுடன் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஈரோடு: ஈரோடு மாநகரில் பலத்த காற்றுடன் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக 108 டிகிரி முதல் 111 டிகிரி வரை வெயில் சுட்டெரித்து வந்தது.

இதனால், மக்கள் அவதியடைந்தனா்.

ஈரோடு மாநகரில் கடந்த சில நாள்களாக மாலை நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சிறு துளிகளுடன் மழை நின்றுவிட்டது.

திங்கள்கிழமை காலை வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சில நிமிஷங்களில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.

மழையின் காரணமாக மாநகரில் தாழ்வான பகுதிகளான முனிசிபல் காலனி, கிருஷ்ணம்பாளையம், காவிரி சாலை, ஆா்கேவி சாலை, கொங்காலம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் கழிவு நீா் ஓடைகளில் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

சுமாா் 40 நிமிஷங்களுக்கும்மேலாக பெய்த மழையால், மாநகரில் கத்தரி வெயிலின் தாக்கம் தணிந்து, குளிா்ச்சியான காலநிலை நிலவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ஈரோடு வெட்டுக்காட்டுவலசு அருகே போஸ்டல் நகரில் சில மரக்கிளைகள் உடைந்தும், மரங்கள் வேறுடனும் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com