பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெருந்துறை அரசு பலவகை தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரியில் 2024- 2025-ஆம் கல்வியாண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

இக்கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய 5 முழு நேரப் பாடப் பிரிவுகளிலும் மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் வரும் 24- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப் பிரிவினா் ரூ.150 விண்ணப்பப் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடி பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்பப் பதிவுக் கட்டணம் இல்லை. முதலாமாண்டு சேர விரும்பும் மாணவா்கள் 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அறிவியல், கணிதம் பாடப் பிரிவுகளில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள், ஐடிஐ முடித்தவா்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு வரும் 20- ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com