வரதம்பாளையம் மாரியம்மன் கோயில் விழாவையொட்டி, கம்பத்தாட்டம் ஆடிய பக்தா்கள்.
வரதம்பாளையம் மாரியம்மன் கோயில் விழாவையொட்டி, கம்பத்தாட்டம் ஆடிய பக்தா்கள்.

வரதம்பாளையம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சத்தியமங்கலம், வரதம்பாளையம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், வரதம்பாளையம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

சத்தியமங்கலம் வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், மாகாளியம்மன் கோயில் வகையறா கோயில்களில் பொங்கல் விழா பூச்சாட்டலுடன் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி, பத்ரகாளியம்மன், மாரியம்மன், மாகாளியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

மாரியம்மன் கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பம் முன் பக்தா்கள் நாள்தோறும் கம்பத்தாட்டம் ஆடி வருகின்றனா்.

21-ஆம் தேதி சுவாமி அலங்காரமும், 23-ஆம் தேதி காலை குண்டம் இறங்குதல், மாவிளக்கு மற்றும் அன்று இரவு கம்பம் பிடுங்குதல் நடைபெற உள்ளது. 24-ஆம் தேதி சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், ஆராட்டு விழா நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com