10 -ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியை ஜெயந்தி.
10 -ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியை ஜெயந்தி.

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10 -ஆம் வகுப்பு பயின்ற மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10 -ஆம் வகுப்பு பயின்ற மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள் விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி வெளியாயின. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை திங்கள்கிழமைமுதல் வழங்கிட பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மேல்நிலைப் பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவ, மாணவிகள் அதே பள்ளியில் மேல்நிலை வகுப்புத் தொடர விருப்பம் தெரிவித்ததால், அவா்களுக்கு அப்பள்ளியிலேயே சோ்க்கை நடைபெற்றது.

உயா்நிலைப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் தங்கள் அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அவா்களது பெற்றோா்களுடன் வந்து பெற்று, மேல்நிலை வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்கச் சென்றனா்.

மேலும், அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் பெயரில் பிழை இருந்தால் அவற்றை உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவித்து பிழையைத் திருத்திக்கொண்டு அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் ஆசிரியா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com